Latestமலேசியா

மார்ச் – ஏப்ரல் மாதத்திற்கு கூடுதலாக ரிம1,000 வாழ்க்கைச் செலவின உதவித் தொகையாக வழங்குவீர் – பக்காத்தான் ஹராப்பான் கோரிக்கை

கோலாலம்பூர், மார்ச் – வாழ்க்கைச் செலவின உதவித் தொகை திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறுவோருக்கு கூடுதலாக மார்ச் மாதம் 1,000 ரிங்கிட்டும் ஏப்ரல் மாதம் 1,000 ரிங்கிட்டையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என பக்காத்தான் ஹராப்பான் கோரிக்கை விடுத்திருக்கிறது.

இந்த நடவடிக்கையினால் அரசாங்கத்திற்கு 8.2 பில்லியன் வெள்ளி கூடுதலாக செலவு ஏற்படும். ஆனால் சேமநிதி வாரிய பணத்தை மீட்டுக் கொள்வதை விட நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இதுவே மிக விரைவான வழி

கோவிட் – 19 வைரஸ் தொற்று மோசமாகி வருவதால் மாதந்தோறும் கூடியபட்சம் 500 வெள்ளியை மீட்டுக்கொள்வதற்கு மலேசியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பாக பிரதமர் மொஹிடின் யாசின் இன்று அறிவித்தார். 55வயதுக்கு குறைந்தவர்கள் தங்களது ஊழியர் சேமநிதியின் இரண்டாவது கணக்கிலிருந்து 12 மாதங்களுக்கு இந்த தொகையை மீட்க முடியும் என மொஹிடின் தெரிவித்தார்.

ஆனால், இது உதவி நிதி அல்ல இது மக்களின் எதிர்கால சேமிப்பிலிருந்து மக்கள் தங்களின் பணத்தை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது என பக்காத்தான் ஹராப்பான் கூறியுள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!