Latestமலேசியா

மார்ச் 9ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டம் நடக்கட்டும் மகத்தான ஹரப்பன்

கோலாலம்பூர், மார்ச் 1- மார்ச் 9ஆம் தேதி முதலில் திட்டமிட்டபடி நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுவதைக்காண விரும்புவதாக பக்கத்தான் ஹரப்பான் எனப்படும் நம்பிக்கை கூட்டணி தெரிவித்தது.

புதிய பிரதமருக்கான ஆதரவை கண்டறிவதற்கு அது சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பதோடு தற்போது நீடித்து வரும் அரசியல் நெருக்கடி இதன்வழி முடிவுக்கு வரும் என பக்கத்தான் ஹராப்பான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.
பக்கத்தானுக்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 114ஆக இருந்ததாகவும் இந்த எண்ணிக்கை இப்போது 112 ஆக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

18 ஆவது நாடாளுமன்ற கூட்டம் இம்மாதம் 9ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதிவரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!