Latestமலேசியா

மீண்டும் இன்னொரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தாதீர் – நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேரரசர் அறைகூவல்

கோலாலம்பூர். மே 18 – நாட்டில் அரசியல் நெருக்கடி தொடரக்கூடாது என நாடாளுமன்ற கூட்டத்தை தொடக்கிவைத்து உரையாற்றியபோது மாட்சியை தங்கிய பேரரசர் சுல்தான் அப்துல்லா கேட்டுக்கொண்டார். தேசிய அரசியல் நெருக்கடியை தீர்வுகான முடியாத அளவுக்கு விட்டுவிக்கூடாது. பிரதமர் பதவியிலிருந்து டாக்டர் மகாதீர் விலக முடிவுசெய்தபோது தாம் கவலை அடைந்ததோடு அவரது முடிவை மாற்றிக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டதையும் சுல்தான் அப்துல்லா தெரிவித்தார். எனினும் டாக்டர் மகாதீர் தமது முடிவில் உறுதியாக இருந்ததால் அவரது முடிவை மாற்ற முடியவில்லை. அதன்பிறகு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையான ஆதரவை பெற்ற பாகோ நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ மொஹிடின் யாசினை பிரதமராக நியமித்ததாக பேரரசர் கூறினார்.
புதிய பிரதமரை நியமிக்கும் நடைமுறை சுமுகமாக நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களுக்கும் அவர் தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார். பொறுப்புணர்வு, மற்றும் கொளரவத்தோடு மொஹிடின் அரசாங்கம் செயல்பட வேண்டும் என்பதோடு மக்களின் சமுக நலனை புறக்கணித்துவிடக்கூடா என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அதோடு ஊழலை துடொத்தொழிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அரசாங்கத்தின் மேம்பாட்டு நடவடிக்கைகள் முறைகேடு மற்றும் லஞ்ச ஊழலினால் பாதிக்கப்பட்டு விடக்கூடாது.

பள்ளிப்பருவத்திலேயே மாணவர் மத்தியில் ஊழல் ஒரு அசிங்கமான பழக்கம் என்பதனை விதைத்திட வேண்டும் என கேட்டும் கொண்டார். அச்சமயத்தில் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுபினரகள் அனைவரும் மேசையைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

இதனிடையே மீண்டும் மற்றொரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திவிட வேண்டாம் என பேரரசர் கேட்டுக்கொண்டு தமது உரையை முடித்தபோது அதனை வரவேற்கும் வகையில் அரசாங்க தரப்பைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மேஜையை தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோவிட்-19 தொற்று பரவலினால் மக்கள் சிரமமான நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் இவ்வேளையில் நாட்டை நிச்சயமற்ற மற்றொரு சூழ்நிலைக்கு கொண்டுச்செல்லக்கூடாது என்ற ஆலோசனையை தெரிவிக்க விரும்புவதாக பேரரசர் கேட்டுக்கொண்டார். இதன் காரணமாகவே நாடாளுமன்ற கூட்டத்தை ஒரு நாள் மட்டும் நடத்துவதற்கு தமது அரசாங்கம் முடிவு செய்ததாக அவர் கூறினார். இதனை தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!