Latestமலேசியா

மீண்டும் மீண்டும் இந்து சமயத்தை இழிவுபடுத்தும் சம்ரி வினோத் மீது ஏன் நடவடிக்கை இல்லை? இந்து சங்கம் கேள்வி

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 11 – ஸாக்கிர் நாய்க்கின் சீடரான சம்ரி வினோத் அண்மையக் காலமாக பல சந்தர்பங்களில் இந்து சமயத்தை இழிவு படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அவர் மீது 800க்கும் மேற்பட்ட போலிஸ் புகார்கள் செய்யப்பட்டன. இந்துக்களையும் இந்து சமயத்தையும் அவர் இழிவுப்படுத்தியதன் தொடர்பில் செய்யப்பட்ட அப்புகார்களின் அடிப்படையில் போலிசார் அவரை கைது செய்தனர். ஆனால் அதன்பின்பு அவர் விடுவிக்கப்பட்டதோடு அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி எந்தவொரு தகவலும் ஏன் தெரிவிக்கப்படவில்லை என இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் மலேசிய இந்து சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆகக் கடைசியாக அவர் கல்லை கும்பிடும் இந்துக்கள் முட்டாள்கள் என கூறியுள்ளார். மதம் மாறியவரான சம்ரி வினோத் பிற சமயத்தை இழிவுபடுத்த எந்த உரிமையும் இல்லை. ஆனால் அவர் தொடர்ந்து அவ்வாறு செய்து வருகிறார். அதுமட்டுமின்றி அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று இந்து சங்கம் உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹம்சா சைனுடினுக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுள்ளது.  இந்நாட்டு இந்துக்கள் சம்ரி வினோத் மீது கடும் கோபத்தில் உள்ளனர். அமைதி காத்து உரிய வழிகளில் நடவடிக்கை எடுக்க ஆவணச் செய்வோம் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். அவரின் செயல் நாட்டில் இன சமய மோதல்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்களுக்கு “ இனங்களுக்கிடையிலான உறவு” எனும் பாடத்தை செல்லிக் கொடுக்கும் போதும் அவர் இந்து சமயத்தை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார். அதுபற்றியும் அப்பல்கலைக்கழக வேந்தர் பெர்லிஸ் சுல்தான், கல்வியமைச்சர், போலிஸ் படைத் தலைவர் ஆகியோருக்கும் முன்பு புகார் கடிதம் அனுப்பியிருப்பதாக இந்து சகத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷான் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சம்ரி வினோத் மீது உடனடி நடவடிக்கை அவசியம் என்றும் அவர் உள்துறை அமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!