Latestமலேசியா

முடிதிருத்தும் நிலையம், சலவை, மின்னியல் பொருட்கள் கடைகள் திறக்கப்படலாம் – அஸ்மின் அலி

பெட்டாலிங் ஜெயா, ஏப் 10 – முடிதிருத்தும் நிலையம், சலவைக்கடை, மின்னியல் பொருட்கள் மற்றும் ஹார்ட்வேர் பொருட்கள் விற்கும் கடைகள் என இன்னும் சில வகை கடைகள் கட்டுபடுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட காலக்கட்டத்தின்போது செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவை சில விதிமுறைகளுக்கு உட்பட்டது என அனைத்துலக வணிகத் தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

மூன்றாம் கட்டமாக மக்கள் நடமாட்ட உத்தரவு ஏப்ரல் 28ஆம் திகதி வரை நீட்டிக்கப்படும் என்றும் சில தொழில்துறைகள் செயல்பட அனுமதி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். முடிதிருத்தும் மற்றும் சிகை அலங்கார நிலையங்களைல் முடி வெட்டுவதற்கு மட்டுமே அனுமதி உண்டு. கண்கண்ணாடி கடைகளும் சலவை சேவை வழங்கும் கடைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சுயசேவை சலவை மையங்கள் செயல்பட அனுமதி இல்லை.

கட்டுபடுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட காலக்கட்டத்தில் வேலை இழப்பதை தவிர்க்கவும், அத்தியாவசிய சேவைகள் மக்களுக்கு கிடைக்க வழி வகுக்கும் அதே சமயத்தில் கோவிட்-19 நெருக்கடிக்கு பிந்திய நாட்டின் பொருளாதாரத்தை நிலைநாட்டவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!