Latestசினிமா

முதலமைச்சர் பதவி வேண்டாம் கட்சிக்கு மட்டுமே தலைமையேற்பேன் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை, மார்ச் 12 – தமிழகத்தின் முதலமைச்சர் பதவி எனக்கு வேண்டாம். மாறாக கட்சிக்கு மட்டுமே தாம் தலைமை ஏற்க விரும்புவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தி புதிய தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதையே தாம் எப்போதும் விரும்பியதாக இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரஜினிகாந்த் கூறினார்.

முதலமைச்சராக வரவேண்டுமென விரும்பியிருந்தால் 1996 ஆம் ஆண்டிலேயே நான் அந்தப் பதவிக்கு வந்திருக்க முடியும். தம்பி வா , பதவி ஏற்க வா என்று அறிஞர் அண்ணா ஒரு காலத்தில் அறைகூவல் விடுத்தார். அந்த அடிப்படையில்தான் அவர் பல தலைவர்களை உருவாக்கி வரலாறு ஏற்படுத்தினார் என்பதை ரஜினிகாந்த் சுட்டிக்காட்டினார்.

கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது எனது முடிவு.அரசியலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதுவே எனது திட்டம். அந்த அடிப்படையில் எனது செயல்பாடு இருக்கும் என ரஜினிகாந்த் கூறினார். முதல்வர் பதவியில் நாங்கள் அமர வைக்கும் தலைவர் சொன்னதை செய்யாவிட்டால் அல்லது வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அவரை தூக்கி எறிவோம் என்று ரஜினிகாந்த் உறுதியான குரலில் தெரிவித்தார்.

2017 க்கு முன்பு வரை நான் அரசியலுக்கு வருவேன் என்று கூறியதில்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சிஸ்டம் சரியில்லை என்று மட்டுமே கூறியிருந்தேன். முதல்வராக வர வேண்டும் என்று நான் நினைத்து பார்த்தது கிடையாது.

அரசியலில் எம்எல்ஏ மற்றும் அமைச்சராகி அதை பார்ப்பது எனக்கு பிடிக்காது. தலைமைத்துவம் சொல்வதை கேட்பவர்கள் தான் தொண்டர்கள்.

எனது முடிவு ஒரு ராஜதந்திரம். நான் முதல்வராக வர வேண்டும் என ரசிகர்கள் சொல்வதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!