Latestமலேசியா

முதல் முறையாக உள்நாட்டில் யாருக்கும் கோவிட்-19 தொற்று ஏற்படவில்லை

கோலாலம்பூர், ஜூலை 1 –உலகை உலுக்கி வரும் கோவிட்-19 தொற்றினால் முதல் முறையாக நாட்டில் எவருக்கும் கோவிட் தொற்று புதிதாக பரவவில்லை என சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஆனால் துர்கியிலிருந்து நாடு திரும்பிய 21 வயது மலேசியருக்கு வெளிநாட்டில் இருந்தபோது இத்தொற்றுக்கு ஆளாகியுள்ளார். இதுவரை 8640 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பதிவாகியுள்ளது. அதே சமயத்தில் இன்று 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளன. அதாவது குணமடைந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 8375 ஆகும்.

அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு அமலுக்கு கொண்டுவந்த SOP-களை பொதுமக்கள் பின்பற்றியதே இன்று நாட்டு மக்கள் யாரும் இத்தொற்று உள்ளாகவில்லை என நோர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார். இதே நிலை அடுத்த 28 நாட்களுக்கு தொடர்ந்தால், மலேசியா கோவிட்-19 தொற்றிலிருந்து விடுபட்ட நாடாக அறிவிக்கப்படும்.

அதே சமயத்தில், இதர நாடுகளை கோவிட்-19 தொற்று இன்னமும் அச்சுறுத்தி வருகிறது. எனவே. பொதுமக்கள் இந்த SOP-களை பின்பற்ற தவறினால் இத்தொற்று மீண்டும் நாட்டில் பரவும் வாய்ப்பு அதிகம் எனறும் அமைச்சர் நினைவுறுத்தினார்.

இன்று மரணம் எதுவும் பதிவாகாத நிலையில், மரண எண்ணிக்கை தொடர்ந்து 121ஆக இருந்து வருகிறது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!