Latestமலேசியா

முன்நிலை சுகாதார ஊழியர்களுக்கு 20 நாட்களில் 60,000 முக கவசங்கள்- புரோட்டோன்

கோலாலம்பூர், ஏப் 10 – கோவிட்-19 வைரஸ் தொற்றை துடைத்தொழிப்பதில் தீவரம் காட்டி வரும் முன்நிலை சுகாதார ஊழியர்களுக்கு face shields எனப்படும் முகத்தை முழுமையாக மூடும் கண்ணாடி போன்ற முககவசத்தை தயாரித்துக் கொடுக்க புரோட்டோன் நிறுவனம் முன்வந்துள்ளது.

ஏப்ரல் 13 தேதி தொடங்கி சுமார் 20 நாட்களில் 60,000 face shields–களை தயாரிக்கவுள்ளதாக புரோட்டோன் நிறுவனம் தெரிவித்துள்ளது. எங்களுக்கு கார் உற்பத்தி செய்யும் நுணுக்கங்கள் தெரியும். ஆகவே, அதன் நுணுக்கங்களைப் பயன்படுத்தி முன்னிலை சுகாதார ஊழியர்களுக்கு இலவசமாக தயாரித்து கொடுக்கப்படும் என புரோட்டோன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரட்சாய்வ் முகமட் (Radzaif Mohamed) அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

ஒவ்வொரு மாவட்டத்தின் தேவைக்கேற்ப அவற்றை விநியோகிக்க புரோட்டோன் சுகாதார அமைச்சுடன் இணைந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!