Latestமலேசியாவிளையாட்டு

முன்னாள் பேட்மிண்டன் விளையாட்டாளர் டான் அய்க் மோங் காலமானார்

கோலாலம்பூர், ஜூன் 1 – 1960 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் மலேசியாவின் முன்னணி பேட்மிண்டன் விளையாட்டாளராக விளங்கிய டான் அய்க் மோங் (Tan Aik Mong ) தமது 70ஆவது வயதில் காலமானார். நீண்ட காலம் புற்றுநோயினால் அவதிப்பட்ட வந்த அவர் தனியார் மருத்துவமனையில் நேற்று இறந்தார்.

1967ஆம் ஆண்டு அகில இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டியில் சாம்பியனாக வாகைசூடியவரும் 1967ஆம் ஆண்டு தாமஸ் கிண்ண பேட்மிண்டன் போட்டியின் வெற்றியாளருமான அவரது மூத்த சகோதரரான 74 வயதுடைய டான் அய்க் ஹூவாங்குடன் சேர்ந்து அனைத்துலக போட்டிகளில் மலேசியாவுக்கு பெருமை தேடித்தந்தவர்களில் டான் அய்க் மோங்கும் ஒருவரவார்.

1970 ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்ற தாமஸ் கிண்ண பேட்மிண்டன் போட்டியில் டான் அய்க் மோங் வெள்ளிப் பதக்கத்தையும் 1973ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். மேலும் 1971ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் டான் அய்க் மோங் தங்கப் பதக்கம் வென்றார்.

சிறந்த விளையாட்டாளரான டான் அய்க் மோங் எளிமையானவர் என்பதோடு அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர் என முன்னாள் ஓட்டக்காரரான டாக்டர் மணி ஜெகதீசன் கூறினார். நாட்டிற்கு பெருமையைத் தேடிதந்த விளையாட்டாளரான டான் அய்க் மோங் களத்தில் வெற்றிபெறுவதற்கு மனம் தளராமல் போராடக்கூடிய விளையாட்டாளராக விளங்கி வந்தார் என் டாக்டர் ஜெகதீசன் கூறினார்.

பேட்மிண்டன் விளையாட்டு சிந்திக்கும் திறனை பயன்படுத்தி விளையாடக்கூடிய ஒரு விளையாட்டு என்று அடிக்கடி கூறிவந்துள்ள டான் அய்க் மோங் பேட்மிண்டன் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1980ஆம் ஆண்டுகளில் மிஸ்புன், ஜைலானி மற்றும் ரஷிவ் சிடேக் சகோதரர்களுக்கு பயிற்சியாரகாவும் பணியாற்றியுள்ளார். மேலும் மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் பயிற்சி திட்டங்களிலும் பங்கேற்றிருந்தார். கணினி சம்பந்தப்பட்ட இரண்டு பெரிய நிறுவனங்களில் திட்ட ஆய்வாளர் மற்றும் கணினி நிர்வாகியாக பணியாற்றியுள்ள டான் அய்க் மோங் கணினித்துறையிலும் நிபுணராக திகழ்ந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!