Latestஉலகம்

மெக்சிக்கோவில் இறந்த நண்பனுக்கு நெஞ்சை உருக்கும் வகையில் இறுதி அஞ்சலி

மெக்சிக்கோ சிட்டி, ஜூன் 24 – நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் அற்புதமான ஊடகமாக சமுக வலைத்தளங்கள் மாறிவருகின்றன என்பதற்கு மற்றொரு அடையாளமாக இறந்துபோன காற்பந்து விளையாட்டாளர் ஒருவருக்கு கோல் அடித்து நண்பர்கள் அஞ்சலி செலுத்தும் காட்சி ஒன்ரு வைரலாகியுள்ளது.
எப்போதும் தங்ளுடன் காற்பந்து விளையாடும் தங்களது 16 வயது நண்பர் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடந்து அவரது உடலுக்கு சக நண்பர்கள் அஞ்சலி செலுத்திய வித்தியாசமான நடைமுறையைக் கொண்ட காணொலி மெக்சிக்கோவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரபலமாகியிருக்கிறது.

சுட்டுக்கொல்லப்பட்ட பதின்ம வயது இளைஞரின் சவப் பெட்டியை வழக்கமாக தாங்கள் காற்பந்து விளையாடும் மைதானத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன் சக விளையாட்டாளர்கள் அந்த சவப்பெட்டியை சுற்றி வருகின்றனர். அதன்பின் ஒரு பையன் மற்றொரு பையனுக்கு பந்தை தட்டிக் கொடுக்கிறான். அந்த பந்தை பெற்ற பையன் கோல் முனையை நோக்கி உதைக்கும்போது அப்பந்து சவப்பெட்டியில் பட்டு கோல் கம்பத்தில் புகுந்துவிடுகிறது.

இதனை தொடர்நது அனைத்து விளையாட்டாளர்களும் அந்த சவப்பெட்டியின் அருகே சூழ்ந்துக்கொண்டு கண்ணீர் விட்டு தங்களது நண்பருக்கு அஞ்சலி செலுத்துகின்றனர். நண்பருக்காக கோல் அடித்துவிட்டோம் என அவர்கள் கூறிக்கொண்டு கதறும் காட்சி மற்றவர்களையும் கலங்க வைப்பதாக இருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!