Latestமலேசியா

மேலும் அதிகமான மருத்துவ பணியாளர்களுக்கு மாதந்திர சிறப்பு அலவன்ஸ்

சிரம்பான், ஏப் 23 – அரசாங்க பொது மருத்துவமனைகளில் அவசர மற்றும் நெருக்கடி பிரிவுகளில் பணியாற்றிவரும் மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களுக்கும் மாதந்திர சிறப்பு அலவன்ஸ் தொகையான 600 வெள்ளியை பெறுவர்.

கோவிட் -19 வைரஸ் தொற்றுக்குள்ளான சந்தேகப்பேர்வளிகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை கையாளும் மருத்துவ பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த சிறப்பு அலவன்ஸ் தொகையை இதர பணியாளர்களுக்கும் நீட்டிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெளியிட்ட சுற்ற்றிக்கையில் கூறப்பட்டது.

அவசர சிகிச்சை நுழைவுப் பகுதியில் அல்லது இதர முக்கிய நுழைவு பகுதியில் சந்தேகத்திற்குரிய அல்லது கோவிட் -19 வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளை கவனிக்கும்படி மருத்துவ பணியாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு அலவன்ஸ் தொகையை இதர மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை செயலாளர் டாக்டர் CHEN CHAW MIN கூறினார்.
கோவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான சந்தேகப் பேர்வழிகளை மருத்துவமனையில் அனுமதிக்கும் மற்றும் அந்த தொற்றுக்குள்ளான சந்தேகப் பேர்வழிகளுக்கு சிகிச்சை வழங்குவோர் உட்பட அது தொடர்பான சிகிச்சையில் சம்பந்தப்பட்டவர்களும் இத்ந சிறப்பு அலவன்ஸ் தொகையை பெறுவதற்கான தகுதியை பெறுவார்கள் என்றும் அவர் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!