Latestமலேசியா

மொஹிடின் தலைமைத்துவம் அனைத்து மக்களையும் பிரதிநிதிக்க வேண்டும் : முகமட் ஹசான்

புத்ரா ஜெயா, மார்ச் 2 – 8ஆவது பிரதமராக புதிய அரசாங்கத்திற்குத் தலைமையேற்றுள்ள மொஹிடின் அனைத்து தரப்புக்களையும் பிரதிநிதிக்கும் அரசாங்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் என மக்கள் எதிர்ப்பார்ப்பதாக அம்னோவின் துணைத்தலைவர் முகமட் ஹசான் தெரிவித்தார்.

மொஹிடினும் இதர மூன்று மலாய்க் கட்சிகளுக்குத் தலைமையேற்றவர்களும் மக்களின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் பொறுப்பைக் கொண்டிருக்க வேண்டும் என அவர் அறைகூவல் விடுத்தார். அனைத்து தரப்பினரின் நலன் மற்றும் நீதியைக் கருத்திற் கொண்டு மலேசியா நிர்வகிக்கப்பட வேண்டும்.

பொருளாதாரம் மீட்சியடைவதற்கான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதோடு இதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் முகமட் ஹசான் நினைவுறுத்தினார். கடுமையாக பாடுபடக்கூடிய, விவேகமான சிந்தனையுடன் செயப்படக்கூடியவர்கள் நமக்கு தேவை. எழுச்சியுடன் பேசக்கூடிய அல்லது கவரக்கூடிய தலைவர்களைவிட விவேகமான சித்தனையுடன் கடுமையாக பாடுபடக்கூடிய தலைவர்கள்தான் மலேசியாவிற்கு வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக பல இன மற்றும் பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தக்கூடிய தலைவர்கள்தான் நமக்கு தேவையென அழுத்தம் திருத்தமாக தமது கருத்தை முகமட் ஹசான் வெளியிட்டார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!