Latestமலேசியா

மொஹிடின் யாசின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள மாட்டேன் – மகாதீர்

இன்று இஸ்தானா நெகாரவில் நடைப்பெறவிருக்கும் டான் மொஹிடின் பதவி ஏற்பு விழாவில் தாமும் தனது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியும் கலந்து கொள்ள போவதில்லை என்று மகாதீர் திட்டவட்டமாக கூறினார். பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்கே அதிக பெருமான்மை ஆதரவு கிடைக்க பெற்ற நிலையில்,அதனை பேரரசரிடம் தெரிவிக்க இயலவில்லை. அரண்மனை தரப்பை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. மாமன்னர் மொஹிடின் யாசினை பிரதமராக அறிவித்து விட்டார் என இன்று அல்-புக்காரில் நடைப்பெற்ற செய்தியாள்ர் கூட்டத்தில் மகாதீர் இதனை தெரிவித்தார். பெர்சத்து கட்சியைச் சேர்ந்த தாம் உள்பட 6 பேர் தமக்கு ஆதரவளிள்லாதாக மகாதீர் தெரிவித்தார். இந்நிலையில் தமது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கிடைக்கப்பெற்று தேவையான பெரும்பான்பை உள்ளாதாக மகாதீர் கூறினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!