Latestமலேசியா

மொ‌ஹிடினின் பதவி உறுதிமொழி சடங்கு சுமூகமாக இருக்கும் ரய்ஸ் யாத்திம்

கோலாலம்பூர் மார்ச் 1 டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் அவர்களின் பதவி உறுதிமொழி சடங்கு இன்று சுமுகமாக இருக்குமென டாக்டர் ரய்ஸ் யாத்திம் கூறியுள்ளார்.

பிரதமர் பதவிக்கு டாக்டர் மகாதீர் 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை பெற்றிருப்பதாக பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கூறியிருந்த போதிலும் நாட்டின் 8ஆவது பிரதமராக மொஹிடினின் பதவி உறுதி மொழி சடங்கு சுமுகமாக நடைபெறும் என மூத்த அரசியல்வாதியும் பெர்சத்து உச்ச மன்ற உறுப்பினருமான ரய்ஸ் யாத்திம் தெரிவித்தார்.

டாக்டர் மகாதீர் விவேகம் நிறைந்தவர். நாட்டில் குழப்பம் ஏற்படுவதை காண அவர் விரும்பமாட்டார் என்று நேற்றிரவு மொஹிடின் வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன் ரய்ஸ் யாத்திம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு வருவதற்கான ஆற்றலை மொஹிடின் கொண்டிருக்கிறார் என அவர் சொன்னார்.

பெர்சத்து கட்சியில் பிளவு ஏற்பட்டிருக்கிறதா என்று வினவப்பட்டபோது அவர்
அதனை மறுத்தார். கட்சியில் பிளவு ஏதும் ஏற்பட்டிருப்பதாக தாம் கேள்விப்படவில்லை என்றும் அவர் சொன்னார். எனினும் பெர்சத்து கட்சியில் கருத்து வேறுபாடுகள் இருப்பதை ரய்ஸ் ஒப்புக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!