Latestஇந்தியாஉலகம்

மோடியின் கோரிக்கையை ஏற்று அகல் விளக்கை ஒளிர செய்த மக்கள்

புதுடில்லி,  ஏப் 6 – கோவிட்-19 வைரஸிற்கு எதிரான போரில்  இந்திய மக்கள் அனைவரும ஒன்றிணைந்தனர் என்பதற்கான அறிகுறியாக  ஞாயிற்றுக்கிழமை இரவு  9  மணிக்கு   தொடங்கி  9 நிமிடம்  வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைக்கும்படி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கைக்கு அந்நாட்டு  மக்கள்  முழுமையான ஆதரவை வழங்கினர்.

நாடு முழுவதிலும் ஒரு சேர இந்திய மக்கள் மின் விளக்குகளை  அணைத்து அகல் விளக்குகளையும்  டார்ச் விளக்குகளையும்  ஒளிரச் செய்தனர். தமிழகத்தின்   அனைத்து மாவட்டங்களைச்  சேர்ந்த மக்கள் மட்டுமின்றி  இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் எந்தவொரு வேறுபாடும் இன்றி இந்த நிகழ்வு வெற்றி பெறுவதற்கு  பிரதமர் மோடிக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

இதனிடையே கோவிட்-19 தொற்று பரவுவதை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பாக  இரண்டு முன்னாள் பிரதமர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய முதலமைச்சர்கள்  மற்றும் அரசியல்கட்சி தலைவர்களுடன்  பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

முன்னாள் குடியரசுத் தலைவர்களான  பிரனாப் முகர்ஜி, பிரதீபா பட்டீல், முன்னாள் பிரதமர்களான  டாக்டர் மன் மோகன் சிங், தேவகவுடா,  ஆகியோருடனும்  மோடி ஆலோசனை நடத்தினார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி  மேற்கு வங்காள முதல்வர்   மம்தா பானர்ஜி, தி. மு.கவின் முன்னாள் துணை முதல்வரும் தி.மு.க தலைவருமான  மு.கஸ்டாலின்  உட்பட பல முக்கிய தலைவர்களுடன்  மோடி  ஆலோசனை நடத்தி கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டதாக  கூறப்பட்டது,

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!