Latestமலேசியா

ரிம1000 அபராதத் தொகையை அதிகரிக்க அரசாங்கம் மறுபரிசீலனை; இன்னும் அதிகமானோர் MCOவை மீறுகின்றனர்

கோலாலம்பூர், ஏப் 10 – கட்டுபடுத்தப்ப்பட்ட மக்கள் நடமாட்ட உத்தரவை மீறுவோருக்கு தற்போது அமலில் உள்ள 1000 ரிகிட் அபராதம் மிகக் குறைவே. தொகையை அதிகரிக்க அரசாங்கம் மறுபரிசீலனை செய்து வருவதாக த்ற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
மக்கள் நடமாட்ட உத்தரவை மீறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த பரிசீலனை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். அதே சமயத்தில் சிறைத்தண்டனை காலமும் நீட்டிக்கப்பட ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாகவும் இது தொடர்ந்து பிறருக்கு பாடமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் முதல் முறையாக இந்த உத்தரவை மீறுவோருக்கு 10,000 சிங்கப்பூர் டாலர் அதாவது 30,492 ரிங்கிட் அபராதம், இரண்டாவது முறையாக உத்தரவை மீறுவோருக்கு 20,000 சிங்கப்பூர் டாலர் அதாவது 60,948 ரிங்கிட் அபராதம், தென் கொரியாவில் 35,000 ரிங்கிட்டும் இந்தோனேசியாவில் 82,000 ரிங்கிட்டும் அபராதம் விதிக்கப்படுகிறது.
666 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள வேளை, அவர்கலீல் 392 பேருக்கு 1000 ரிங்கிட் விதிக்கப்பட்டுள்ளது, 263 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், மேலும் 11 பேர் போலிஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் 18 இந்த மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு அமலுக்கு வந்தது முதல் ஏப்ரல் 9ஆம் திகதி வரையில் மொத்தம் 7479 பேர் இந்த உத்தரவை மீறியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!