Latestஉலகம்

லடாக் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதட்டம்

புதுடில்லி, ஜூன் 17 – லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்திய – சீன படைகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீர்ர்கள் வீர மரணம் அடைந்ததோடு காயம் அடைந்த நால்வர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே வேளை இந்திய இராணுவம் நடத்திய பதிலடியில் சீன தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும் இந்த தகவலை சீனத் தரப்பில் எவரும் உறுதிப்படுத்தவில்லை. அதே வேளையில் எல்லைப் பகுதியில் மோதல் மற்றும் பதட்டத்தை தடுப்பதற்கு இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய தரப்பில் ஏற்பட்ட உயிர்ச்சேதத்திற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய முப்படை தளபதிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சீனாவுடன் ஏற்பட்டுள்ள இப்போதைய மோதலில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இப்போதைய நிலவம் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பிரதரமர் நரேந்திர மோடியிடமும் ராஜ்நாத் சிங் ஆலேசனை நடந்தியுள்ளார். லடாக் எல்லை நெருக்கடியில் தனது வீரர்களை இந்தியா இழந்திருப்பது கவலையை அளிப்பதாகவும் நமது வீர்கள் வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தியிருப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்குமிடையிலான எல்லைத் தகராறைத் தொடர்ந்து சீன அதிபர் ஷீ ஜின் பெங்கின் உருவ பொம்மைகள் அமிதபாத் பாபு நகர் மற்றும் வரனாசியில் எரியூட்டப்பட்டன.
இதனிடைய இந்தியா – சீனா எல்லை நெருக்கடியை அணுக்கமாக கவனித்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது. அதோடு இவ்விரு நாடுகளும் எல்லை நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காணவேண்டுமென அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. லடாக் மோதலில் சீன ரணுவ வீர்ர்களில் 35 பேர் மாண்டதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. சீனாவும் இந்தியாவும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் Antonio Guterres கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!