Latestமலேசியா

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இறந்ததாக தகவல் வெளியானது

பியோங்யாங் , ஏப் 26-வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் சனிக்கிழமை இரவு இறந்ததாக வடகொரியா மற்றும் தூரக் கிழக்கிருந்து வெளிவரும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அந்த தகவலை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் மற்றொரு வட்டாரங்கள் தெரிவித்தன.

அந்த 36 வயதுடைய சர்வாதிகாரி இறந்துவிட்டார் என சீனா மற்றும் ஜப்பானிய ஊடகங்களில் தகவல் வெளியானதாகவும் கூறப்பட்டது.

அவரது மூளை செயல் இழந்து விட்டதால் சுயநினைவற்ற நிலையில் இருப்பதாகவும் அவர் இனி உயிர் பிழைக்கும் வாய்ப்பு இல்லை என்றும் மற்றொரு தகவல்கள் கூறுகின்றன.

இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின்னர் அவர் சுயநினைவை இழந்து விட்டதாக கூறப்பட்டது.

எனினும் வடகொரியா அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் எதனையும் உறுதிப்படுத்த முடியாது என வட கொரியாவை சேர்ந்த எதிர்ப்பாளர் குழு ஒன்று தெரிவித்தது.

கிம் ஜோங் உன்னின் உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து வடகொரியாவுக்கு மருத்துவ குழு ஒன்றை சீனா அனுப்பி வைத்ததாகவும் கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!