Latestமலேசியா

வர்த்தக மையத்தின் பாதுகாவலர்களிடம் கோவிட் பரிசோதனை

கோலாலம்பூர், மே 8 – கோலாலம்பூரிலுள்ள  வர்த்தக  மையத்தின்  பாதுகாவலர்கள் புதிதாக  கோவிட் -19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக  அடையாளம் காணப்பட்டதைத் தொட்ர்ந்து வெளிநாடுகளைச் சேர்ந்த அனைத்து பாதுகாவலர்களும் கட்டாயமாக கோவிட் தொற்று பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும் என அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

வர்த்தக மையங்களில் உள்ள பாதுகாவலர்கள் பொதுமக்களுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டவர்களாக இருப்பதால் அவர்கள் கட்டாய பரிசோதனைக்கு உள்ளாக வேண்டுமென தற்காப்பு துறைக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி கூறினார். வர்த்தக மையத்திற்கு வரும் வருகையாளர்களின் உடல் வெப்பத்தை பாதுகாவலர்கள் பரிசோதிக்கின்றனர். பேரங்காடிகளுக்கு வருகை புரிபவர்களின் பெயர்களை  பாதுகாவலர்கள் பதிவு செய்வதையும் இஸ்மாயில் சப்ரி சுட்டிக்காட்டினார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!