Latestமலேசியா

வழக்க நிலையிலான பயணிகளை ஏற்ற பொது போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி – இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, ஜூன் 11 – நாடு முழுவதிலும் செயல்படும் பொது போக்குவரத்து சேவைகள் வழக்க நிலையிலான பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுவதாக தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார். ஆனால் பயணிகள் தங்களின் பெயர்களை பதிந்துக் கொள்வது, உடல் வெப்ப நிலையை அளவிடுவது, முககவசம் அணிவது போன்ற பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

விரைவுப் பேருந்து, விமாங்கள் ஆகியவை முன்பு கூறப்பட்டதைப் போல பாதி பயணிகளை ஏற்றி செல்ல வேண்டியதில்லை. ஆனால் எழுத்துப் பூர்வமாகவோ அல்லது MySejahtera செயலி மூலமாகவோ அவர்களின் விவரங்களை பயணிகள் பதிந்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.  விரைவு பேருந்தில் ஏறுபவர்களின் உடல் வெப்பத்தை பேருந்து ஓட்டுனர் அளந்திட வேண்டும், அதே சமயத்தில் முக கவசம் இல்லாமல் வரும் பயணிகளுக்கு முக கவசம் கொடுக்க வேண்டும் என இஸ்மாயில் சப்ரி கூறினார். ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் பேருந்தை கிருமி நாசினியால் தூய்மைபடுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

பொது பேருந்துகளில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, முககவசம் அணிவது, கிருமி நாசினி பயன்படுத்துவது போன்ற நடைமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். அதோடு MySejahtera செயலியையும் அவர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மின்னியல் வாடகை கார்களில் பயணிக்கும் பயணிகளும் அதன் ஓட்டுனர்கலூம் கட்டாயமாக முக கவசம் அணிந்திருப்பதோடு, இணையம் வழி கட்டணம் மற்றும் MySejahtera செயலியையும் அவர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். வெவேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே காரில் பயணிக்கும்போது முககவசம் அணிவது கட்டாயமாகும். மாநிலங்கலுக்கிடையிலான பயண தடையை அரசாங்கம் மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, நேற்று நெடுஞ்சாலைகளில் பயணம் செய்த கார்களின் எண்ணிக்கை 2.04 மில்லியனாக அதிகரித்துள்ளது. முந்தைய தினம் கார்களின் எண்ணிக்கை 1.2 மில்லியனாக இருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!