Latestமலேசியா

வாரத்தில்  2 நாட்களுக்கு கோயில்களை திறக்க அனுமதிப்பீர் மலேசிய இந்து சங்கம் கோரிக்கை

கோலாலம்பூர் ,. மே 25 – நிபந்தனையுடன் கூடிய நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள காலத்தில் காலத்தில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கோயில்களை திறப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்க வேண்டுமென மலேசிய இந்து சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வெள்ளிக்கிழமைகள் மற்றும் சனிக்கிழமைகளில் ஜூன்  10 ஆம் தேதி முதல்
ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட அனைத்து 84 கோயில்களும் திறப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் மோகன் ஷான் கேட்டுக்கொண்டுள்ளார்

எஸ் .ஒ. பி எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகளின் கீழ் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கோயில்களைத் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கோவிட்  தொற்று  இல்லாத அபாயகரமற்ற  பச்சை மண்டலப் பகுதிகளில் உள்ள 84 ஆலயங்கள் ஜூன் பத்தாம் தேதி முதல் திறப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருக்கிறது.

எனினும் இந்த ஆலயங்களில் 70 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 12 வயதுக்கு குறைவானவர்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படாது.  ஒரு நேரத்தில் குறைந்தபட்சம் 30 பேர் மட்டுமே ஆலயத்தில் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.

மேலும் வெளிநாட்டினர் ஆலயத்திற்குள் செல்வதற்கும் அனுமதிக்கப்படாது போன்ற நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இந்த ஆலயங்கள் திறக்கப்படுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!