Latestமலேசியா

விசாரணை அறிக்கையை அம்பலப்படுத்தும் போலீஸ்காரர்கள் மீது கடும் நடவடிக்கை – ஜ,ஜி,பி எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜூலை 15- போலீஸ் விசாரணையின் அறிக்கை மற்றும் அது தொடர்பான தகவலை போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸகாரர்கள் அம்பலப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்ப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்துவது மற்றும் அந்த அறிக்கையை சமுக வலைத்தளத்தில் பகிரச் செய்யும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்கார்கள் மீது 1972ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் விசாரணை நடத்ப்படும் என போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹமிட் படோர் எச்சரித்தார்.

விசாரணை அறிக்கையை வெளியிடுவது ஒரு குற்றமாகும், விசாரணை அறிக்கைகள் ரகசியம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக வகைப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். பல்வேறு புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகமான விசாரணை அறிக்கைகள் சமுக வலைத்தளங்களில் பதிரப்படுகின்றன. போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீஸ்காரர்கள் இதனை வெளியிட்டிருப்பது அல்லது அம்பலப்படுத்துவதாக தெரிய வந்தால் அவர்களுக்கு எதிராக அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஹமிட் படோர் கூறினார்.

உதாரணத்திற்கு பாலியல் தொடர்பான குற்றத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் போலீசில் புகார் செய்திருந்தால் அல்லது சம்பந்தப்பட்ட புகார்தாரர் தமக்கு ஏற்பட்ட அவலத்தை போலீஸ் அதிகாரிகளுக்கோ அல்லது போலீஸ்காரர்களுக்கு தெரிவித்திருந்தால் அதனை வாட்ஷாப் மூலம் சமுக வலைத்தளங்கள் வழியாக ஊடகங்களுக்கு தெரிவிப்பது பொறுப்பற்ற செயலாகும் என அண்மையில் புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஹமிட் பாடோர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!