Latestமலேசியா

விபத்துக்குப் பின் காருக்கு தீ வைப்பு; மூவர் கைது

தாசிக் கெலூகோர், ஜூன் 22 – அண்மையில். பெண்மணி ஒருவர் சாலையில் நடுவில் புகுந்த அந்த நாயை மோதுவதை தடுக்க முயன்ற போது 2 மோட்டார் சைக்கிள்களை மோதியதைத் தொடர்ந்து அவரின் காருக்கு தீ வைத்ததின் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர். அந்த விபத்தில் இருவர் காயமடைந்தனர். அதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், 3 சந்தேகப்பேர்வழிகளை போலீசார் கைது செய்தனர். அதில் இருவர் காயமடைந்த ஆடவரின் சகோதரர்கள் என்று தெரிய வந்துள்ளது. 19 மற்றும் 29 வயதிற்கு உட்பட்ட அவ்விருவரும் தாசிக் கெலுகோர் வட்டாரம் அருகே கைது செய்யப்பட்டனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பான காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு ஆக்ரோஷமாக தவறான கருத்துகளை பதிவிட்டதன் மூலம் மற்றொரு 33 வயது ஆடவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, அம்மூவரையும் தடுப்புக் காவலில் வைக்க பட்டவொர்த் செக்ஷன் நிதிமன்றத்திற்கு கொன்டு செல்லப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!