Latestமலேசியா

விபத்தில் சிக்கிய ஆடவருக்கு கோவிட்  தொற்று

ஜோகூர் பாரு மே. 25. ஜோகூர், குழுவாங்கில்  மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய ஆடவர் ஒருவர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி இருப்பது கண்டறியப்பட்டதை  அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதிக்கு பிறகு குளுவாங்கில் மீண்டும் ஒரு நபர் கோவிட் தொற்றுக்குள்ளாகி இருப்பது தெரியவந்திருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஆர். வித்தியானந்தன் தெரிவித்தார் . இதனால்  குளுவாங்  மஞ்சள் மண்டலமாக மாறியிருக்கிறது.

விபத்திற்குள்ளான  86 வயது ஆடவர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தாகவும் இவருக்கு கோவிட் தொற்றுக்குள்ளாகி இருப்பதாக  மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.

அந்த  நபருக்கு கடுமையான காய்ச்சலும் இருமலும் இருந்தது. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவருக்கு கோவிட் -19 தோற்று இருப்பதும் தெரியவந்ததாக வித்தியானந்தன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மே 21-ஆம் தேதி அந்த ஆடவர் சாலை விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விபத்து நடைபெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு  இருமல் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதற்குமுன் அவர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படவில்லை. அந்த ஆடவர் பொருட்களை வாங்குவதற்காக வீட்டிலிருந்து வெளியேறியபோது விபத்திற்குள்ளாகி  தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்குள்ளான அந்த ஆடவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 42 பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட னர். அவர்களிடமிருந்து பரிசோதனைக்காக எச்சில் எடுக்கப்பட்டுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!