Latestமலேசியா

விமான டிக்கெட்டுகளின் கட்டணத்தை குறைக்கவும் – விமான நிறுவனங்களுக்கு இஸ்மயில் சப்ரி கோரிக்கை

புத்ராஜெயா, ஜூலை 3 – MCOவுக்கு முந்தைய நிலையிலான விமான டிக்கெட் கட்டணத்தை மீண்டும் விமான நிறுவனங்கள் அமல்படுத்த வேண்டும் என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக் கொண்டுள்ளார். விமாங்கள் முன்பைபோல முழு பயணிகளுடன் பயணத்தை மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கி விட்டதால் கட்டண குறைப்புக்கு விமான நிறுவனங்கள் முன்வர வேண்டும் என அவர் கூறினார்.
விமான பயணத்திற்கான டிக்கெட் விலை அதிகரித்துள்ளதை நாங்கள் அறிவோம். இதற்கு முன்பாக அதிகபட்சம் 66 விழுக்காடு பயணிகளை மட்டுமே ஏற்றிச் செல்ல வேண்டும் என தேசிய பாதுகாப்பு மன்றம் கூறியிருந்தது. அதது டிக்கெட்டுகளின் விலை ஏற்றத்திற்கு காரணமாக இருக்கும். ஆனால் இதையே காரணமாக வைத்துக் கொண்டு விமான நிறுவனங்கள் விலையை மேலும் ஏற்றக் கூடாது.
அதே சமயத்தில், பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பு சலுகையை வழங்குவதற்கு விமான நிறுவனங்கள் முன்வரவேண்டும். இந்த பிரச்சனையை களைய போக்குவரத்து அமைச்சு விமான நிறுவனங்களுடன் பேச்சு நடத்தும் என்றும் இஸ்மயிர் சப்ரி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!