Latestஇந்தியா

வெட்டப்பட்ட மரங்கள் பேசினால் – உலகளவிலான மாபெரும் கவிதைப் போட்டி

ஜூன் 13 – காந்தி அறநிறுவனத்தின் ஏற்பாட்டில் உலகளவில் மாபெரும் வெப்மினார் கவிதை போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசியா உட்பட உலகளாவிய நிலையில் உள்ளவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்படுகின்றனர். வெட்டப்பட்ட மரங்கள் பேசினால் என்ற தலைப்பில் 30 வரிகளுக்கு கவிதை எழுதி அதனை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வாட்ஸ்அப்பில் அச்சு வடிவில் டைப் செய்யப்பட்டு அனுப்பப்படும் கவிதைகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

இப்போட்டிக்கு கவிதைகளை அனுப்புவோர் 9382011555 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு கவிதைகளை ஜூன் 21ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று கவிதைகளுக்கு முறையே முதல் பரிசாக ரூ,10,000, இரண்டாவது பரிசாக ரூ 5,000 மற்றும் மூன்றாவது பரிசாக ரூ 3,000 வழங்கப்படும். ஆறுதல் பரிசாக இரு நபர்களுக்கு ரூ.1,000 பரிசு வழங்கப்படும். இது தொடர்பான மேல் விவரங்களுக்கு 9787674749 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். இந்த கவிதைப் போட்டி ஆதரவு வழங்கும் உலகளாவிய ஊடகங்களில் வணக்கம் மலேசியாவும் இடம்பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!