Latestமலேசியா

வெளிநாடுகளைச் சேர்ந்த 24,125 பேர் கோவிட் பரிசோதனையை மேற்கொண்டனர்

கோலாலம்பூர், மே 11 – வெளிநாடுகளைச் சேர்ந்த 24,125 பேர் இதுவரை கோவிட் பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் 487 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 487 பேர் இன்னமும் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் மூவர் சிகிக்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.
வெளிநாட்டினர் மீதான பரிசோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார். நடமாட்ட கட்டுப்பாடு ஆணை கடுமையாக்கப்பட்ட பகுதியில் உள்ள உள்நாட்டினர் வெளிநாட்டினர் என அனைவரும் பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும் என டாக்டர் நோர் ஹிசாம் கேட்டுக்கொண்டார். . அவர்களுக்கு கோவிட் தொற்று இருப்பதாக கண்டுப்பிடிக்கும்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும் .
செத்தியா அலாம் கட்டுமானப் பகுதியில் 12 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் செத்தியா அலாமில் புதிதாக எவருக்கும் தொற்று ஏற்படவில்லை, அங்கு நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக டாக்டர் நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!