Latestஇந்தியா

வேலை கிடைப்பதற்காக அம்மா தம்பியின் ஒத்துழைப்போடு அப்பாவை கொலை செய்த மகன்

ஹைதரபாத், ஜூன் 10 – தனியார் துறையில் வேலை செய்யும் தன் தந்தை இறந்தால் அந்த வேலை தனக்கு கிடைக்கும் எனும் எண்ணத்தில் தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் நிகழ்ந்துள்ளது.
அந்த தந்தை இயந்திர இயக்குனராக வேலை செய்து வந்த தனியார் துறையில் ஒருவர் இறந்து விட்டால், அவரின் வாரிசுக்கு அந்த வேலை தரப்படும் என்ற கொள்கை இருந்துள்ளது.
இந்நிலையில், சில தினகளில் வேலை ஓய்வு பெறவிருந்த தன் தந்தையை 35 வயது மகன் திருப்பதி என்பவன் அம்மா மற்றும் தம்பியின் ஒத்துழைப்போடு கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளான். மே மாதம் 25ஆம் திகதி நடந்த இச்சம்பவம் இப்போதுதான் அம்பலமாகியுள்ளது.
இதில் யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க, திட்டமிட்டபடி அப்பாவை கொலை செய்வதற்கு இரு தினங்களுக்கு முன்பு அம்மா மற்றும் தம்பி இருவரும் வெளியூர் சென்று விட்டனர்.
பின்னர் கிராம மக்கள் ஏற்பாடு செய்த மது விருந்தில் கலந்துக் கொண்ட திருப்பதி யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குச் சென்று தந்தையை கழுத்து நெறித்து கொன்றுள்ளான். அதனைத் தொடர்ந்து தனது பாட்டியின் வீட்டில் சென்று படுத்துவிட்டான்.
மறுநாள் காலை வீடு திரும்பி அண்டை வீட்டுக்காரர்களிடம் தன் தந்தை நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறி நம்பவைத்து இறுதிச்சடங்கிற்கும் ஏற்பாடு செய்துள்ளான்.
தந்தையின் வேலை தனக்கு கிடைக்க போலிஸ் புகார் தேவை என்பதால் அருகாமையில் உள்ள போலிஸ் நிலையத்திற்குச் சென்று தந்தையின் மரணத்தை தெரிவித்துள்ளான். தந்தை மதுபானம் அருந்தியிருந்ததாகவும் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளான்.
மரணத்தை உறுதிபடுத்த விசாரணைக்கு வந்த போலிசார் இறந்தவரின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட அவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பரிசோதனையில் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, திருப்பதியை போலிசார் விசாரித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!