Latestமலேசியா

ஸம்ரி வினோத் மீது விரைவில் சட்ட நடவடிக்கை; அரசு சார்பற்ற அமைப்புகள் முன்வந்தன

கோலாலம்பூர், ஜூன் 30 – சமுக வலைத்தளங்களில் இந்து சமயம் மற்றும் தெய்வச் சிலைகளை மிகவும் மோசமாக சிறுமைப்படுத்தி பேசிவரும் ஸம்ரி வினோத் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது என அரசு சார்பற்ற இந்திய இயக்கங்களும் ஆலயங்களும் முன்வந்துள்ளன.
பல இனங்களைக் கொண்ட மலேசியர்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் ஸம்ரி வினோத்தின் நடவடிக்கை இருக்கிறது. அதுவும் இந்து சமயத்தை சிறுமைப்படுத்தும் வகையில் சமுக வலைத்தளங்களில் அவர் பேசிவருவது இந்துக்களின் மனதை புன்படுத்துவதாகவும் உள்ளது. ஏற்கனவே அவருக்கு எதிராக நாடு தழுவிய நிலையில் பல்வேறு போலீஸ் புகார்கள் செய்யப்பட்ட போதிலும் ஸம்ரி வினோத் தனது நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளவில்லை.
எனவே அவருக்கு எதிராக அவதூறு வழக்கும் நீதிமன்ற தடையுத்தரவும் எடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக சட்ட நடவடிக்கை குழுவின் ஆலோசகரும் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் தலைவருமான ராதாகிருஷ்ணன் கூறினார். நேற்று இந்து தர்ம மாமன்றத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் இது குறித்து இணக்கம் காணப்பட்டது. இந்த சந்திப்பு கூட்டத்தில் சுமார் 20 இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகளும் நான்கு ஆலயங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!