Latestமலேசியா

ஸ்ரீ கெம்பாங்கான் ஆலயத்தில் திருமணம் நடந்துள்ளது போலீசார் இப்போது உறுதிப்படுத்தினர்

கோலாலம்பூர், 25 –

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணைய அமலாக்கத் தின்போது நேற்று ஸ்ரீ கெம்பாங்ஙான் ஆலயத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றதை போலீசார் இப்போது ஒப்புக்கொண்டுள்ளனர். அந்த ஆலயத்தில் திருமண வைபவம் நடைபெற்றதாக வெளியான தகவலை போலீசார் இதற்கு முன் மறுத்திருந்தனர்.

அந்தத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து தனிப்பட்ட நபர்களின் விவரங்களையும் இப்போது அதிகாரிகள் திரட்டி வருகின்றனர்.

அந்த திருமண நிகழ்வை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்த 41 வயதுடைய நபரிடமிருந்து புகார் பெற்றதை தொடர்ந்து போலீசார் அந்த ஆலயத்திற்கு சென்றனர். தாம் பதிவேற்றம் செய்த புகைப்படங்கள் பல்வேறு வாட்ஸ்அப் குழுமங்களில் பகிரப்பட்டதை தொடர்ந்து இன்று அதிகாலை மணி 12 40 அளவில் அந்த ஆடவர் இதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார்.

சிலாங்கூர் ஸ்ரீ கெம்பாங்ஙான் தாமான் செர்டாங் ராயாவிலுள்ள கோயிலில் திருமண நிகழ்வு நடைபெற்றது என்ற தலைப்பிலான காணொளியில் தமது புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததாக அந்த ஆடவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

இந்த புகாரை பெற்றதை தொடர்ந்து இன்று காலை மணி 7.45 அளவில் ஸ்ரீகெம்பாங்ஙான் போலீஸ் நிலையத்தை சேர்ந்த குழுவினர் அந்த ஆலயத்திற்கு சென்றதை செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் இஸ்மாடி புர்ஹான் உறுதிப்படுத்தினார்.

தொடக்கத்தில் அந்த ஆலய நிர்வாகம் அங்கு திருமண நிகழ்வு நடைபெற்றதை மறுத்தது. பின்னர் நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நடந்த திருமணத்தில் சுமார் 20 முதல் 30 அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டுமே கலந்து கொண்டதை அந்த ஆலய நிர்வாகத்தினர் ஒப்புக்கொண்டனர் என அவர் தெரிவித்தார்.

தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு சட்டத்தின்கீழ் அனைத்து சந்தேகப் பேர்வழிகளின் விவரங்களையும் போலீசார் திரட்டு வார்கள் என இஸ்மாடி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!