Latestமலேசியா

ஸ்ரீ கெம்பாங்ஙான் ஆலயத்தில் நேற்று திருமணம் நடைபெறவில்லை போலீஸ் உறுதிப்படுத்தியது

செர்டாங், மே 25- நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பட்டு ஆணை அமல்படுத்தப் பட்டிருக்கும் இவ்வேளையில் நேற்று காலையில் ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஆலயத்தில் திருமணம் நடைபெற்றதாக சமூக வலைத்தளத்தில் வந்த தகவலை போலீசார் மறுத்தனர். அந்த ஆலய நிர்வாகத்திடம் மேற்கொண்ட விசாரணையில் அங்கு திருமணம் எதுவும் நடைபெறவில்லை என்பதையும் போலீசார் உறுதிப்படுத்தினர்.

அந்த ஆலயத்தில் திருமணம் எதுவும் நடைபெறவில்லை என செர்டாங் போலீஸ் தலைவர் துணை கமிஷனர் இஸ்மாடி புர்ஹான் உறுதிப்படுத்தினார்.

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட காலத்தில் அந்த ஆலயத்தில் எந்த ஒரு நிகழ்ச்சிகளோ அல்லது சடங்குகளோ நடைபெறவில்லை என்பதையும் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளியில் இடம்பெற்றிருந்த திருமணச்சடங்கு மற்றும் எந்த ஒரு நிகழ்ச்சியும்நேற்று அந்த ஆலயத்தில் நடைபெறவில்லை என்பதையும் ஆலய பராமரிப்பார்கள் எங்களிடம் தெரிவித்தனர்.
அதோடு அந்த ஆலயத்தில் செர்டாங் போலீஸ் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அங்கு எந்த ஒரு நடவடிக்கையும் நடைபெறவில்லையென இஸ்மாடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

ஸ்ரீ கெம்பாங்ஙானில் உள்ள ஆலயத்தில் திருமண சடங்கு நடைபெற்றதாகவும் அதில் சுமார் 100 பேர் கலந்துகொண்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு நிமிட காணொளி காட்சி வெளியானதைத் தொடர்ந்து இந்த அறிக்கையை இஸ்மாடி வெளியிட்டார். இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது கோவிட்-19 தொற்று பரவாமல் இருப்பதற்காக ஆலய வளாகங்களில் நடைபெறும் நடவடிக்கைகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!