Latestமலேசியா

ஹரிராயாவின்போது  ஒன்று கூடினர் 37 பேருக்கு குற்றப்பதிவு 

புத்ரா  ஜெயா  மே 29 – ஹரிராயா பெருநாளின் போது ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கண்ட
31 பேருக்கு அபராதம் விதிக்கப்படும் குற்றப்பதிவு வழங்கப்பட்டது.

மொத்தம் 285 குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டன. அவற்றில் 194 குற்றப் பதிவுகள் சாலை தடுப்பு சோதனையின்போது வழங்கப்பட்டததாக தற்காப்பு துறைக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி கூறினார்.

எனவே அனைத்து தரப்பினரும் நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். அனுமதியின்றி மாநில எல்லைகளை கடக்கும் நபர்களுக்கு எதிராக போலீசார் கடுமையான நடவடிக்கையை எடுப்பார்கள்.   அபராத தொகையை செலுத்துவதற்கான குற்றப்பதிவு வழங்குவதும் இந்த நடவடிக்கையில் அடங்கும்.

சொந்த ஊர்களுக்கு செல்வதாக கூறி எல்லையைக் கடந்த 1,243 வாகனங்கள் மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பிச் செல்லும்படி பணிக்கப்பட்டதாகவும் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

சிலாங்கூர், மலாக்கா மற்றும் கெடா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த வாகன ஓட்டுனர்கள் தடையையும் மீறி எல்லைகளை கடந்ததாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!