Latestமலேசியா

ஹரி ராயாவின் போது வீட்டிலேயே இருங்கள்; திறந்த இல்ல உபசரிப்பு வேண்டாம்

கோலாலம்பூர், மே 18 – மலேசியர்கள் வீட்டில் இருந்தவாறு ஹரிராயாவை கொண்டாட வேண்டும் என்பதோடு தங்களது இல்லத்தில் திறந்த இல்ல உபசரிப்பை நடத்த வேண்டாம் என சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டாக்டர் நோர் ஹிஷாம்  அப்துல்லா கேட்டுக்கொண்டார்.  கோவிட்டிற்கு  எதிரான போராட்டத்தில்  சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள விதிமுறைகளை  சமுகத்தின் அனைத்து தரப்பினரும்  பின்பற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கோவிட்-19 தொற்று மீண்டும் பரவக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு கூட்டசு பிரேசேம் மற்றும்  சிலாங்கூரில் அபாயகரமான பகுதிகள் என அடையாளம் காணப்பட்ட இடத்தில்  புதிதாக எவரும் தொற்றினால் பாதிக்கப்படுவதை  சுகாதார அமைச்சு காண விரும்பவில்லை என்று அவர் சொன்னார்,  ஏற்கனவே  கோவிட்-19 பரவிய இடங்களில் மக்கள் அதிகமாக கூடினால்  மீண்டும் இந்த தொற்று பரவக்கூடும் என டாக்டர்  நோர்  ஹிஷாம் கூறினார். அதோடு இவர்கள் மாநிலங்களை கடந்து சென்றால் ஏற்கனவே தொற்றின் பாதிப்பின்றி இருக்கும்  பகுதிகளிலும் கோவிட் தொற்று பரவும் அபாயம்  உள்ளது.

இந்த விவகாரத்தில் ஈரான் நாட்டை மலேசியர்கள் ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும். அந்ந நாட்டில் மக்கள் அளவுக்கு அதிகமாக கூட்டம் கூட்டமாக கூடியதால் கோவிட் தொற்று மிகவும் வேகமாக பரவியதை அவர் சுட்டிக்காட்டினார்.  ஒரு மாநிலத்திலிருந்தோ அல்லது ஒரு மாவட்டத்திலிருந்தோ கடந்து மற்ற இடத்திற்கு செல்வதை தவிர்த்துக்கொண்டால் கோவிட் பரவுவதை விரைவாக தடுக்க முடியும்.  எனவே இம்முறை ஹரிராயா கொண்டாட்டம் நமது வீடுகளிலே முடித்துக்கொள்வதுதான் சிறந்த அணுகுமுறையாக இருக்கும். இதுவே இந்த ஆண்டு ஹரிராயா கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்க வேண்டும் என  டாக்டர் நோர் ஹிஷாம்  நினைவுறுத்தினார்.

 

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!