Latestமலேசியா

2வது துணைப்பிரதமர் பதவிக்கு முக்ரிஸ் பெயரை பரிந்துரைத்தேனா? மகாதீர் மறுப்பு

கோலாலம்பூர், ஜூன் 29 – பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் அரசாங்கத்தை கைப்பற்றினால் இரண்டாவது பிரதமராக தமது மகன் முக்ரிஸ் மகாதீர் முன்மொழியப்பட்டதில் தாம் பின்னணியாக இருந்ததாக கூறப்படுவதை டாக்டர் மகாதீர் முகமட் மறுத்தார். இரண்டாவது துணைப்பிரதமர் பதவிக்கு முக்ரிஸ் பெயர் முன்மொழிய்ப்பட்டால் என்னை குறைகூறுவார்கள் என்று எனக்கு தெரியும்.
இந்த பரிந்துரையை நான் தெரிவிக்கவில்லை. ஜூன் 22ஆம் தேதி அமனா தலைவர் முகமட் சாபுவும் DAPயின் தலைமை செயலாளர் லிம் குவான் எங்கும் வெளியிட்ட கூட்டறிக்கையில் இரண்டாவது துணைப்பிரதமர் பதவிக்கு முக்ரிஸ் பெயரை முன்மொழிந்தனர். முதல் முறையாக தாம் பிரதமராக பதவி வகித்தபோது தமது மகன்கள் எவரும் அரசியலில் பங்கேற்கக்கூடாது என தாம் தடை விதித்ததாகவும் மகாதீர் தெரிவித்தார். தமது குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு சலுகைகள் காட்டுவதாக எவரும் குற்றஞ்சாட்டுவதை தாம் விரும்பாததே இதற்கு காரணம் என டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
எனினும் தாம் பிரதமர் பதவியில் இல்லாத காலக்கட்டத்தில்தான் தமது மகன்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு அனுமதித்ததாகவும் அவர் சொன்னார். அரசியலில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. ஆனால் இதில் அவர்கள் வெற்றி பெறுகிறார்களா இல்லையா என்பது அவர்களைப் பொறுத்தது என்றும் மகாதீர் தெரிவித்தார். முக்ரிஸின் பெயர் குறிப்பிட்ட சில பதவிகளுக்காக முன்மொழியப்படும்போது எனது தனிப்பட்ட நலன்களுக்காக அதனை எதிர்க்கும் உரிமை எனக்கு கிடையாது. எனது இந்த விளக்கத்தை நம்புவதும் நம்பாத்தும் மற்றவர்களைப் பொறுத்தது என மகாதீர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!