Latestமலேசியா

21வது மரணம் பதிவு; அலோர்ஸ்டாரைச் சேர்ந்த 63 வயது ஆடவர்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 26 – கோவிட்-19 தாக்கத்தினால் 21வது நபரின் மரணம் பதிவாகியுள்ளது. 63 வயதான அவர் அலோர்ஸ்டாரைச் சேர்ந்தவர். மார்ச் 23ஆம்  திகதி சுல்தானா பாஹியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் இன்று காலை 4 மணிக்கு மரணமடைந்துள்ளார்.

இவரும் நீண்ட நாள் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்தவர் என்று ஶ்ரீ பெட்டாலிங் சமய நிகழ்வில் கலந்துக் கொண்ட பங்கேற்பாளர் என்றும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இந்நிலையில் மரணமடைந்த 20வது நபருக்கு வயது 76. கிளாந்தானைச் சேர்ந்த அவர் ஶ்ரீ பெட்டாலிங் சமய நிகழ்வில் கலந்துக் கொண்டவர் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கடந்த மார்ச் 18 ஆம் தேதி கிளாந்தான் சுல்தான் இஸ்மாயில் பெட்ரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 4.35 மணியளவில் மரணமடைந்துள்ளார் என சுகாதார தலைமை இயக்குனர் நூர் இஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!