Latestமலேசியா

3 அடி கிணற்றில் தவறி விழுந்த மாற்றுதிறனாளி; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்

ஈப்போ, ஜூலை 1 – கம்போங் மாலிம் மாவார் தின் அருகே உள்ள கிணற்றில் விழுந்த 71 வயதான மாற்றுதிறனாளி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். நேற்று பி.ராமசாமி என்பவர் அந்த மூன்று அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளார்.
மீண்டும் மேலே வர முடியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருந்த அவரைக் கண்ட பொது மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கயிற்றின் மூலம் இறங்கி அவரை காப்பாற்றினர்.
அதனைத் தொடர்ந்து அவரை பரிசோதித்ததில் உடம்பில் சொற்ப காயங்கள் மட்டுமே காணப்பட்டதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!