Latestஉலகம்விளையாட்டு

30 ஆண்டுகளுக்கு பிறகு பிரிமியர் லீக் விருதை கைப்பற்றியது LIVERPOOL

லண்டன். ஜூன் 26 – இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்து போட்டியில் Liverpool அணி 30 ஆண்டுகளுக்குப் பின் லீக் விருதை கைப்பற்றியது. 1990ஆம் ஆண்டுக்குப் பின் லீவர்பூல் அணி இந்த விருதை வென்றுள்ளது. செல்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் சிட்டி (Manchester City) கிளப்பை வீழ்த்தியதைத் தொடர்ந்து டiverpool குழுவுக்கான லீக் விருது உறுதியானது. தற்போது லீக் பட்டியலில் 63 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் மென்செஸ்டர் சிட்டி இனி லீக் விருதை பெறும் வாய்ப்பு இல்லை.

Liverrpool குழுவுக்கு இன்னும் ஏழு ஆட்டங்கள் எஞ்சியுள்ளதால் இங்கிலாந்து பிரிமியர் லீக் போட்டியில் வேறு எந்த குழுவும் லீக் விருதை பெறுவதில் Liverpool குழுவுக்கு மிரட்டலை ஏப்டுத்தும் வாய்ப்பை கொண்டிருக்கவில்லை.

கடந்த 30 ஆண்டு காலமாக பிரிமியர் லீக் விருதுக்கு குறி வைத்து Liverpol குழு விளையாடி வந்தாலும் இம்முறை கோவிட்-19 பரவலின் காரணமாக அந்த அணியின் வெற்றியை அதன் ரசிகர்கள் கொண்டாட முடியவில்லை. இதுவரை 31 ஆட்டங்களில் விளையாடியுள்ள Liverpool 28 வெற்றிகள் ,இரண்டு டிரா மற்றும் ஒரு ஆட்டத்தில் தோல்வி கண்டதன் மூலம் மொத்தம் 86 புள்ளிகளுட்ன் லீக் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. புதன்கிழமையன்று நடைபெற்ற ஆட்டத்தில் Liverpool 4 – 0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் குழுவை வென்றது என்பது குறிப்பிட்த்த்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!