Latestமலேசியா

6 மாதத்திற்குப் பிறகு செலுத்தப்படும் வாகன கடன் தொகைக்கு வட்டி வசூலிக்காதீர் – நிதி நிறுவனங்களுக்கு வலியுறுத்து

கோலாலம்பூர், மே 2 – வாகனங்கள் வாங்கியோருக்கு மாதந்திர தவணைப் பணத்தை செலுத்துவதற்கு ஆறு மாத கால ஒத்திவைப்புக்கு நிதி நிறுவனங்களுடன் காணப்பட்ட இணக்கத்திற்கு ஏற்ப அந்த கடனை திரும்ப செலுத்தும்போது கடனாளிகளிடம் வட்டி வசூலிக்கப்படக்கூடாது என நிதி அமைச்சர் Datuk Sri தெங்கு ஷப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் (Tengku Zafrul Tengku Abdul Aziz) கேட்டுக் கொண்டார்.

இந்த கடன் தொகையை செலுத்துவோருக்கு அதற்கான வட்டியை நிதி நிறுவனங்கள் வசூலிக்க கூடாது. மாறாக வட்டி விகிதத்திற்கு விலக்களிப்பதை அனைத்து நிதி நிறுவனங்களும் பரிசீலிக்க வேண்டுமென தெங்கு ஷப்ருல் வலியுறுத்தினார். விற்பனை கொள்முதல் உடன்பாட்டின் விதிகளுக்கு உட்பட்டு இந்த வட்டி விகிதம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
ஆறு மாத காலத்திற்கு பிறகு வாகனங்களுக்கான கடன் தொகையை செலுத்துவோர் அதற்கான வட்டி செலுத்த வேண்டியதில்லையென இதற்கு முன் கூறப்பட்டிருந்தது. ஆனால் ஆறு மாதத்திற்கான தவணைப் பணத்தை ஒரே நேரத்தில் செலுத்துவோருக்கு மட்டுமே வட்டி விகிதம் வசூலிக்கப்படாது என தற்போது நிதி நிறுவனங்கள் அறிவித்ததால் பெரும்பாலான இணையத்தளவாசிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டின் பேங்க் நெகாரா சட்டத்தின் கீழ் இந்த விவகாரம் பேங்க் நெகாராவின் திகாரத்திற்குட்பட்டதாகவே இருந்தாலும் மக்களின் தேவையை கவனத்திற்கொண்டு பேங்க் நெகாரா மற்றும் நிதி நிறுவனங்களுடன் அரசாங்கம் நடத்திய பேச்சுக்களின் மூலம் இது குறித்து விவேகமான முடிவு காணப்பட்டதை தெங்கு ஷப்ருல் சுட்டிக்காட்டினார்.
கோவிட்-19 தொற்று பரவியதால் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சவால் நிறைந்த பொருளாதார சூழ்நிலையில் B40 மற்றும் M40 எனப்படும் குறைந்த, நடுத்தர வருமானம் பெறும் மக்களின் சிரமத்தை வங்கிகள் உணர்ந்துகொண்டு இந்த வட்டி விகிதத்திற்கு விலக்களிக்க வேண்டும் என தெங்கு ஷப்ருல் கேட்டுக்கொண்டார்.

இதனிடையே இந்த விவகாரத்தில் கடன் வாங்கியர்களுக்கு ஆதரவாக பேங்க் நெகாரா இருக்க வேண்டும் என அம்னோவின் மூத்த தலைவரான துங்கு ரசாலி ஹம்சா (Tengku Razaleigh Hamzah) கேட்டுக்கொண்டார். சில மாதங்களுக்கு வட்டி வசூலிக்காமல் இருப்பதால் நிதி நிறுவனங்கள் அல்லது வங்கிகளுக்கு அப்படி என்ன இழப்பு ஏற்படப்போதிறது என முன்னாள் நிதியமைச்சருமான துங்கு ரசாலி வினவினார். நிதி ஒருங்கிணைப்பாளர் அமைப்பு என்ற முறையில் பேங்க் நெகாரா மலேசியா எப்போதும் கடன் பெற்றவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!