Latestமலேசியா

CMCOவை மீறிய குற்றங்களுக்காக 132 பேர் கைது

புத்ரா ஜெயா, மார்ச் 18 – CMCOவின் SOP எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட சீரான விதிமுறைகளை மீறிய குற்றங்களுக்காக 132 தனிப்பட்ட நபர்களை  அரச மலேசிய போலீஸ் கைது செய்தது.  SOPயை மீறும் நபர்களுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என    தற்காப்பு அமைச்சர்  இஸ்மாயில் சப்ரி யாக்போப்  எச்சரித்தார்.

எனவே நிர்ணயிக்கப்பட்ட  சீரான விதிமுறைகளை   கடைப்பிடிப்பதை அனைத்து தரப்பினரும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.  ஒத்துழைப்பும்  தனி நபர் கட்டுப்பாடும் கோவிட்-19 பரவலை  தடுப்பதில் முக்கிய பங்காற்ற முடியும் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.  அனைவரும்  SOPயை உறுதியுடன்  பின்பற்ற வேண்டும் என்பதை இஸ்மாயில்  சப்ரி மீண்டும் நினைவுறுத்தினார். இதன்வழி கோவிட்-19 தொற்று பரவலை  தடுப்பதில் நமது செயல்பாடு விவேகமாக இருக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.

நிபந்தனையுடன் கூடிய நடமாட்ட கட்டுப்பாட்டு  ஆணையின்  SOP கண்காணிக்கப்படுவது மற்றும் அது பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவற்காக    அரச மலேசிய போலீஸ் படை தலைமையிலான பணிக்குழு 70,461 சோதனைகளை நடத்தியுள்ளது, . பேரங்காடிகள், உணவகங்கள், தொழிற்சாலைகள்  மற்றும் வங்கிகளிலும்   இந்த சோதனை நடத்தப்பட்டதாக  இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!