Latestமலேசியா

MCOவுக்குப் பிறகு வீடமைப்புத்துறை துரித வளர்ச்சி அடையும் – சுரைய்டா கமாருடின்

கோலாலம்பூர். ஜூன் 30 – MCO எனப்படும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணைக்குப் பிறகு வீடமைப்புத்துறை துரித வளர்ச்சி அடையும். கோவிட்-19 நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணைக்குப் பிறகு அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் மீட்டுக்கொள்ளும் என்பதால் வீடுகள் விற்பனை முன்புபோல் சுறுசுறுப்பாக இருக்கும் என வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் சுரைய்டா கமாருடின் தெரிவித்தார்.
இப்போதைய MCO காலத்தில் வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் கண்காட்சிகள் அல்லது அறிமுக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். நடமாட்ட கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்கள் தங்களது வீடுகளில் இருக்கின்றனர், வீடுகள் எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதுவும் சிறந்த வாழ்க்கை வசதிக்கு வீடுகள் எவ்வளவு முக்கியம் என்பதையும் மக்கள் உண்ர்ந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார்.
கோவிட்-19 தொற்று பரவல் முடிவுக்கு வந்ததும் வீடுகள் விற்பனை சுறுசுறுப்பாக இருக்கும் என சுரைய்டா தெரிவித்தார். வீட்டுக் கடன்களுக்கு வட்டி செலுத்துவதை தற்காலிமாக நிறுத்தி வைப்பது, வீடுகள் கொள்முதல் உடன்பாடு கட்டணத்திற்கு விலக்களிப்பது. வீடு வாங்குவோருக்கான முத்திரை வரி விலக்கு மற்றும் 500,000 ரிங்கிட்டிற்கும் குறைவான விலையைக் கொண்ட வீடுகளுக்கு வரி கழிவு ஆகிய பல்வேறு ஊக்குவிப்பு சலுகைகளை அரசாங்கம் வழங்கியிருப்பதால் அதிகமானோர் வீடுகளை வாங்குவார்கள் என்றும் சுரைடா நம்பிக்கைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!