Latestமலேசியா

MCO: சிறுநீரகம், தக்காளிகளை தூக்கி எரிந்து அதிருப்தியை காண்பிக்கும் வெளிநாட்டினர்

கோலாலம்பூர், ஏப் 10 – மெனாரா ப்ளாசா சிட்டி ஒன், சிலாங்கூர் மென்ஷன், மலேயன் மென்ஷன் ஆகிய மூன்று இடங்களில் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டினாலும் உணவு கிடைப்பதில் சிரமத்தை எதிர்நோக்குவதாலும் அங்குள்ள வெளிநாட்டினர் சிலர் மேலிருந்து கீழே பணியில் ஈடுபட்டுள்ள அமலாக்க அதிகாரிகள் மீது சிறுநீரகம் அடங்கிய பைகள், தக்காளி, வெங்காயம் போன்றவற்றை தூக்கி எரிந்து தங்களின் அதிருப்தியை தெரிவிக்கின்றனர்.

இதனை எதிர்கொள்ள அங்குள்ள போலிஸ், இராணூவம் மற்றும் ரேலா அதிகாரிகள் தலையில் ஹெல்மட்டுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலிருந்து வீசப்படுவதால் யார் எந்த மாடி அல்லது எந்த வீட்டிலிருந்து இந்த பொருட்களை வீசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என அமலாக்க அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவர்களுக்கான உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதால் தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!