Latestமலேசியா

MCO: 28 ஏப்ரல் வரை நீட்டிக்கப்படும் – பிரதமர் அறிவிப்பு

புத்ராஜெயா, ஏப் 10 – அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது ஏப்ரல் 28ஆம் திகதி நீட்டிக்கப்படும் என பிரதமர் மொஹிடின் யாசின் அறிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தகவலின்படி நாட்டில் நிலவிவரும் கோவிட்-19 தாக்கத்தை எதிர்கொள்ள அமல்படுத்தப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு இதன் தாக்கத்தை பெருமளவுக்கு குறைக்க உதவியுள்ளது. ஆகவே இதிலிருந்து முழுமையாக வெளிபட சமூக இடைவெளி அவசியம் என்றும் அதனால்தான் இந்த நீட்டிக்கப்பட்ட காலவரை அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள மக்கள் நடமாட்ட கட்டுபாடு முடிவடைந்தாலும் பள்ளிகள் திறக்கப்படாது என்றும் அதற்கு பதிலாக இணைய வழி கல்வியை மேலும் துரிதப்படுத்த கல்வி அமைச்சுக்கு தாம் பணித்துள்ளதாகவு பிரதமர் அறிவித்தார்.

உலக சுகாதார அமைச்சும் கட்டுபடுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட உத்தரவை நீட்டிக்க அனைத்து நாடுகளையும் வலியுறுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.  முஸ்லிம்கள் விரைவில் கொண்டாடவுள்ள ஹரி ராயா பெருநாளிலும் மசூதிக்குச் செல்வதும், சொந்த ஊர்களுக்குச் செல்வதும் அல்லது ரமாடான் சந்தைக்குச் செல்வதை நமது பாதுகாப்பு கருதி இவ்வருடம் நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகல் கட்டம் கட்டமாக அதற்கான சில நிபந்தனைகளோடு திறக்கப்படும் என்றும் ஆனால் கட்டுபடுத்தப்பட்ட மக்கள் நடமாட்ட உத்தவின் விதிமுறைகள் தளர்த்தப்படாது என்றும் பிரடதமர் நினைவுறுத்தினார்.
எனவே மக்கள் பொறுமைக் காக்க வேண்டும். சுத்தத்திற்கு முன்னிரிமை வழங்கி அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

அதே வேளை அரசாங்க தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவ ஊழியர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள் என அனைத்து முன்னிலை வீரர்களுக்கும் தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.
நாட்டிற்கு சேவையாற்றும் அதே சமயத்தில் அவர்களின் பாதுகாப்பையும் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!