Latestமலேசியா

VIDEO – ஆற்று நீர் வெள்ளை நிறமாக மாறும் அவலம் ; பேராக் சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை

ஈப்போ, ஏப் 10 – ஈப்போ ஜெலப்பாங் அருகே உள்ள ஆற்றின் அருகாமையிலுள்ள தொழிற்சாலையின் கழிவுப்பொருட்கள் கலந்து ஆற்று நீர் வெள்ளை நிறமாக தோற்றமளித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அப்பகுதியில் வசிக்கும் அஸ்ரி ஜங்கோட் என்பவர் மிக மோசமாக நிலையில் காணப்பட்ட ஆற்றின் காணொளியை முகநூலில் பதிவிட்டார்.

வருடத்தில் 2 தடவை, 20 வருடமாக நிகழ்ந்து வரும் இப்பிரச்சனைக்கு சம்பந்தப்பட்ட துறையினர் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அருகாமையிலுள்ள கையுறை தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் இந்த ஆற்றில் சேர்ந்து, அந்நீர் வெள்ளை நிறமாக மாறி விடுகிறது. இதனால மீன்கள், முதலைகள் போன்ற உயிரினங்கள் மடிகின்றன என அவர் சாடினார்.

Pencemaran dari sebuah kilang membuat sarung tangan yang terletak di kawasan perindustri jelapang ipoh perak… beribu ribu ikan mati… perkara Ini sudah berlaku 20 tahun…Nama kilang : Mapa Glove Sdn BhdLokasi : Kawasan Perindustri Jelapang Ipoh PerakKementerian Alam Sekitar Dan AirSprm Negeri PerakDewan Bandaraya IpohUstaz Dato' Tuan Ibrahim Tuan ManDato' Tuan Ibrahim bin Tuan Man (Official)

Posted by Asri Janggut on Thursday, April 9, 2020

இந்த காணொளி வைரலானதைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்தனர். சுற்றுச்சூழல் மற்றும் நீர் அமைச்சின் அதிகாரிகள், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேராக் சுற்றுச்சூழல் துறையினர் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையை சோதனையிட்டத்தில் பிரச்சனை எதுவும் இல்லை என அத்துறையின் தலைமை அதிகாரி ரோஸ்லி சூல் தெரிவித்தார்.
அந்த ஆற்றின் நீர் மாதிரிகள் மற்றும் இறந்த மீன்களை ஆய்வு செய்வதற்காக மீன்வளத் துறைக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார். சம்பந்தபட்ட தொழிற்சாலை மீது தவறு கண்டறியப்பட்டால் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

இந்நிலையில், அருகாமையில் இருக்கு கையுறை தொழிற்சாலையிலிருந்து வெளீயான கழிவுப் பொருள்தான் இந்த ஆற்றுத் தூய்மைக்கேட்டுக்கு காரணம் எனவும் அந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் கழிவுப் பொருள் வெளியாகும் குழாயை அடைக்க மறந்ததே இதற்கு காரணம் எனவும் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பு வகிக்கும் இடைக்கால குழு உறுப்பினருமான முகமட் அக்மால் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை மதியம் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும் இதனால் அந்த ஆற்றின் 1 கி.மீட்டர் தூரம் வரை தூய்மைக்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட தொழிற்சாலையும் இரவு 11 மணியளவில்தான் இந்த விவகாரத்தை மாநில அரசிற்கு அறிவித்தது. அந்த தொழிற்சாலை ஆற்றை தூய்மைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!